Friday, September 9, 2011

காத்திருப்பதுன் அழைப்பிற்காக........!

கண்ணீரின் பாதையிலே
நடந்து சென்ற என் வாழ்வை
சொர்க்கத்தின் வாயிலிலே நிறுத்திவிட்டாய்...

அன்பிற்காய் ஏங்கிய என்னை
திணறடிக்கும் அன்புதந்து
உன் பக்கம் சாயத்துவிட்டாய்....

இருண்டுபோன என் வாழ்வை
வண்ணமாக மாற்றிவிட்டாய்.....

துவண்டுபோன என் மனதின்
துன்பங்களை துடைத்துவிட்டாய்       
அன்பே.....

நீ என்னில் கொண்ட
அன்பு இதுவரை நான்
எவரிடமும் பற்றதில்லை

நீ என்னை சேர்ந்துவிட்டால்-உயிர்
நீங்கும்வரை வாழ்ந்திடுவேன்
உன் அன்பின் பாத்திரமாய்...

அதுவரை அன்பே
நான் காத்திருப்பதுன்
இனிய அழைப்பிற்காக...............!

No comments:

Post a Comment