காதலா...
உன்னை காதலித்த நாள்முதலாய்
தூக்கத்தைத்துறந்தேன்
தொலைபேசி உரையாட.....
சின்னச்சின்ன சில்மிசங்கள்
திகட்டாத நினைவுகளாய்.....
கடற்கரை மணலினிலே நடைபோட்ட காலங்கள்
கணக்கெடுக்க முடியாதவை....
ஆலய வீதிகளில் அனைவரும் எமைப்பார்த்து
அழகான ஜோடியென்று கூறிவிட
குதுகலித்து சுற்றிவந்த காலங்களை
வார்த்தையில்லை வர்ணிக்க....
அழகிய வாழ்க்கையினை எதிர்பார்த்து காத்திருக்க
அர்த்தமற்றதாக்கிச்சென்றதன்
காரணம்தான் என்னவென்று
இன்றும்தான் புரியவில்லை....
பட்டமரமாகி பரிதவித்து நிற்கின்றேன்
செய்வதறியாது.....- உன்னை
காதலித்த காரணத்தால்
ஆனலும்........
இன்றும்முன்னை நேசிக்கிறது-என்
ஊமை மனது.......
என் மரணத்தின் பின்பேனும்
கல்லறைப்பூக்களாகியென் மடியில்
சேர்ந்துவிடு......
அன்றேனும் அமைதியுறட்டும் - என்
ஆன்மா.......!

No comments:
Post a Comment